​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தம் உயர்வு..!

Published : Sep 13, 2019 8:36 PM

இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தம் உயர்வு..!

Sep 13, 2019 8:36 PM

இந்திய பங்கு சந்தைகளில் இன்று வர்த்தகம் உயர்வுடன் நிறைவு அடைந்துள்ளது.

மும்பை பங்குசந்தையின் குறியீடு எண்ணான சென்செக்ஸ் 280.71 புள்ளிகள் உயர்ந்து 37384.99 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குசந்தையின் குறியீட்டு எண்ணான நிப்டி 93.10 புள்ளிகள் உயர்ந்து 11075.90 புள்ளிகளாக உள்ளது.

மும்பை பங்குசந்தையில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கி பங்கு 54 புள்ளிகள் உயர்ந்த து. இதே போன்று ரிலையன்ஸ் பங்குகள் 42.20 புள்ளிகளும், கோட்டாக் மஹேந்திரா பங்குகள் 39.62 புள்ளிகளும், இன்போசிஸ் பங்குகள் 36.89 புள்ளிகளும், பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் 19.93 புள்ளிகளும், ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் 16.87 புள்ளிகள் வரை உயர்ந்தது.

இதே போன்று தேசிய பங்குசந்தையில் ஐசிஐசிஐ வங்கி பங்குகள்13.06 புள்ளிகளும், ஐஓசி வங்கி பங்குகள் 10.14 புள்ளிகளும், ரிலையன்ஸ் பங்குகள் 10.05 புள்ளிகளும், இன்போசிஸ் பங்குகள் 8.82 புள்ளிகளும் உயர்ந்தன.

பங்கு சந்தைகளில் வங்கிகள் மற்றும் பெட்ரோலிய நிறுவனங்களின் பங்குகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றதால் உயர்வு காணப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.