​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்நாடு மாநில துப்பாக்கிச்சுடும் போட்டியில் காவலர் தலைமையிட அணி முதலிடம்

Published : Sep 13, 2019 6:52 PM

தமிழ்நாடு மாநில துப்பாக்கிச்சுடும் போட்டியில் காவலர் தலைமையிட அணி முதலிடம்

Sep 13, 2019 6:52 PM

தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் காவலர் தலைமையிட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள துப்பாக்கிச் சுடும் தளத்தில் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 11ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியை காவல்துறை கூடுதல் இயக்குநர் செயலாக்கம் தொடங்கி வைத்தார்.

காவல்துறை தலைவர், காவல்துறை கூடுதல் செயலாக்கம் முன்னிலையில் நடைபெற்ற இப்போட்டியில் ஆயுதப்படை, காவலர் தலைமையிடம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், சென்னை மாநகர ஆணையரகம், பெண் காவலர் பிரிவு உள்ளிட்ட 8 மண்டலங்களைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடும் வீரர்கள் பங்கேற்றனர்.

8 மண்டலங்களில் இருந்தும் வந்த 250 வீரர்கள் பங்கேற்ற இந்தப்போட்டியில், ரைபிள், கார்பன் பிரிவுகளில் காவலர் தலைமையிட அணியும், பிஸ்டல் மற்றும் ரிவால்வர் பிரிவில் ஆயுதப்படை காவலர் அணியும் சாம்பியன் பட்டங்களை தட்டிச் சென்றது.

ஒட்டுமொத்த போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்த காவலர் தலைமையிட அணிக்கு காவல்துறை இயக்குநர்கள் தமிழ்ச்செல்வன், சைலேந்திராபாபு ஆகியோர் இணைந்து சூழல் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.