​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போக்குவரத்து விதிமீறுவோருக்கான அபாரதம் உயர்வுக்கு கெஜ்ரிவால் வரவேற்பு

Published : Sep 13, 2019 4:42 PM

போக்குவரத்து விதிமீறுவோருக்கான அபாரதம் உயர்வுக்கு கெஜ்ரிவால் வரவேற்பு

Sep 13, 2019 4:42 PM

புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து டெல்லி போக்குவரத்தில் சிறப்பான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

உயர்த்தப்பட்டுள்ள அபராதத் தொகையால் பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டால் அதை குறைப்பதற்கான அதிகாரமும் தங்களுக்கு உள்ளது என்று செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து விதிமீறுவோருக்கு அதிக அபராதம் விதிக்க வழி வகை செய்யும் புதிய மோட்டர் வாகனச் சட்டத்தை செயல்படுத்த முடியாது என்று எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் கேரளா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கூறிவிட்டன.

மிகவும் கடுமையான அபராதம் என்று கூறி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் நிராகரித்துள்ளார். இதுமட்டுமின்றி பாஜக ஆளும் குஜராத் மாநில அரசு, புதிய அபாரத்தொகையை கணிசமாக குறைத்துள்ளது.

இந்த நிலையில் அதிக அபராதம்  விதிப்பால் டெல்லி போக்குவரத்தில் சிறப்பான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறி கவனத்தை ஈர்த்துள்ளார்.