​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாயமானவர்களில் மேலும் ஒருவர் உடல் மீட்பு

Published : Sep 13, 2019 4:30 PM

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாயமானவர்களில் மேலும் ஒருவர் உடல் மீட்பு

Sep 13, 2019 4:30 PM

கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் நடந்த படகு விபத்தில் மாயமானவர்களில் மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமாநல்லூர் என்ற தீவு கிராமத்தில் கடந்த 11 ஆம் தேதி நடந்த கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று விட்டு பக்தர்கள் படகு மூலம் திரும்பியுள்ளனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 39 பேர் சென்ற படகு கொள்ளிடம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

முதலில் நீரில் மூழ்கிய அனைவரும் மீட்கப்பட்டதாக கூறப்பட்டநிலையில் 3 பேர் வீடு திரும்பவில்லை என்று தகவல் கிடைத்தது. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள், மாயமான 3 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை கருப்பூரை சேர்ந்த ராணி என்பவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இன்று பட்டுக்குடியைச் சேர்ந்த சுயம்பிரகாசத்தின் உடல், கும்பகோணம் அருகே மகாராஜபுரத்தில்  மீட்கப்பட்டுள்ளது.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்கி மாயமானவர்களில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளநிலையில் நாயக்கர் பேட்டையைச் சேர்ந்த பழனிச்சாமியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.