​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அத்திவரதர் நீராழி மண்டபம் மழைநீரால் நிரம்பியது..!

Published : Sep 13, 2019 3:54 PM

அத்திவரதர் நீராழி மண்டபம் மழைநீரால் நிரம்பியது..!

Sep 13, 2019 3:54 PM

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபம் மழை நீரால் நிரம்பியதால், சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆர்வமுடன் வந்து வணங்கிச் செல்கின்றனர்.

அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் சயனகோலத்தில் வீற்றிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அதன் ஒருபகுதியாக இந்தாண்டு அனந்தசரஸ் குளத்தில் இருந்து எடுக்கப்பப்பட்ட அத்திவரதர் 48 நாட்கள் சிறப்பு தரிசனத்திற்கு பின் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் சயனகோலத்தில் வைக்கப்பட்டார்.

அத்திவரதர் வைக்கப்பட்ட குளத்தில் சுத்தமான நீரை நிரப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடந்து, ஆழ்துளை கிணறுகளில் இருந்து மோட்டர் பம்பு மூலம் குளத்தில் நீர் நிரப்பும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தற்போது பெய்த பரவலான மழையால் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபம் நிரம்பியுள்ளது. 24 படிக்கட்டுகளைக் கொண்ட அனந்தசரஸ் குளத்தில் 2 படிக்கட்டுகள் வரை மழை நீரால் குளம் நிரம்பி, ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதனைக்காண வரும் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பக்தர்கள் நீரால் நிரம்பியிருக்கும் நீராழி மண்டபத்தில் இருக்கும் அத்திவரதரை தரிசனம் செய்தும் செல்கின்றனர்.