​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உடலுக்கு தீமை அளிக்காத நீரா பானத்தை பொதுமக்கள் அருந்த வேண்டும் - அமைச்சர் M.R.விஜயபாஸ்கர்

Published : Sep 13, 2019 12:56 PM

உடலுக்கு தீமை அளிக்காத நீரா பானத்தை பொதுமக்கள் அருந்த வேண்டும் - அமைச்சர் M.R.விஜயபாஸ்கர்

Sep 13, 2019 12:56 PM

கரூர் மாவட்டம் க.பரமத்தியில் விவசாயிகளால் தொடங்கப்பட்டுள்ள நீரா பானம் அங்காடியை போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

தென்னை விவசாயிகளின் நலனை பேணிக்காக்கும் வகையில் தமிழகத்தில் நீராபானம் இறக்கி, விற்பனை செய்துக்கொள்ள தமிழக அரசு கடந்த 2017ம் ஆண்டு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில்  தென்னை மற்றும் வேளாண் பயிர் சாகுபடி விவசாய சங்கத்தை சேர்ந்த 5 விவசாயிகள் மாவட்டத்தில் முதன் முறையாக இதற்கான அனுமதியை பெற்று தற்போது நீராபானம் விற்பனை அங்காடியை கரூர் - கோவை சாலையில் உள்ள க.பரமத்தியில் தொடங்கி உள்ளனர்.

இந்த அங்காடியை இன்று திறந்து வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நீரா இறக்கும் முறை மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டு பொருட்கள் குறித்தும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து நிகழ்வில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வறட்சி காலங்களில் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் வகையில் நீரா பானம் இறக்கும் திட்டத்திற்கு முதல்வர் அனுமதி வழங்கியதாகவும், மக்கள் அனைவரும் கேடு விளைவிக்கும் வெளிநாட்டு குளிர்பானங்களை தவிர்த்து உடலுக்கு தீமை விளைவிக்காத நீரா பானத்தை அருந்தினால் தென்னை விவசாயிகள் பயணடைவார்கள் என தெரிவித்தார்.