​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கரூர் வந்தடைந்த சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு சிறப்பான வரவேற்பு

Published : Sep 13, 2019 12:11 PM

கரூர் வந்தடைந்த சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு சிறப்பான வரவேற்பு

Sep 13, 2019 12:11 PM

காவிரி கூக்குரல் என்ற தலைப்பில் இரு சக்கர வாகன பிரச்சாரம் மேற்கொண்டுள்ள சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு கரூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

காவிரிக் கரையோரம் 240 கோடி மரங்களை 12 ஆண்டுகளில் நட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 3 ஆம் தேதி தலை காவிரியில் இரு சக்கர வாகன பேரணியை ஜக்கி வாசுதேவ் தொடங்கினார். ஏராளமான ஆதரவாளர்களுடன் ஹன்சூர், மைசூர், மாண்டியா, பெங்களூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக பயணம் செய்து கரூர் வந்தடைந்தார். அவருக்கு கோவை சாலையில் உள்ள முனியப்பன் கோவில் அருகில் கரூர் ஈஷா யோகா மையம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ், கரூர் மாவட்டத்தில் மட்டும் 3 ஆண்டுகளில் 2 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும், இந்த ஆண்டு பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு காவேரி என்று பெயர் சூட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து திருச்சி நோக்கி இருசக்கர வாகன பிரச்சாரத்தை தொடர்ந்தார்.