​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம் செய்ய இடைக்கால தடை

Published : Sep 12, 2019 3:54 PM

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம் செய்ய இடைக்கால தடை

Sep 12, 2019 3:54 PM

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமன நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சிவகங்கையை சேர்ந்த சோனியாகாந்தி, ராமநாதபுரத்தை சேர்ந்த கலைவாணி உள்ளிட்ட 12 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் தேர்வுக்கான அறிவிப்பாணையை மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டதும், அதற்கான தேர்வு ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டதும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆனால் தேர்வு நடைமுறைகள், முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், தேர்வில் நிறைய விதிமீறல்கள் உள்ளதாகவும் மனுவில் புகார் கூறப்பட்டிருந்தது. தேர்வு பட்டியலும் நியாயமான முறையில் வெளியிடப்படவில்லை என்பதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்திற்கான நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு குறித்து மேலும் மருத்துவ தேர்வு வாரியம் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.