​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தலைமை ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் பள்ளி ஆசிரியை தற்கொலை முயற்சி

Published : Sep 11, 2019 12:25 PM

தலைமை ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் பள்ளி ஆசிரியை தற்கொலை முயற்சி

Sep 11, 2019 12:25 PM

சிவகங்கை மாவட்டம் சித்தலூரில் தலைமை ஆசிரியரின் பாலியல் தொந்தரவு காரணமாக ஆசிரியை ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்தலூரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியை ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஆசிரியைக்கு தலைமை ஆசிரியர் பிரிட்டோ பள்ளியில் நாள்தோறும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை ஆசிரியை சக ஆசிரியர் மற்றும் ஊழியர்களிடம் கூறியதை தொடர்ந்து, தலைமை ஆசிரியர் பிரிட்டோ, தன்னை அனுசரித்து செல்லுமாறும், மீறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக புகார் கூறியும், தலைமை ஆசிரியர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. தொடர்ந்து தலைமை ஆசிரியர் பிரிட்டோவின் சீண்டல் எல்லை மீறவே ஆசிரியை இது குறித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளி வளாகத்திலேயே எலி மருந்தை உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சக ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக சிவகங்கை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மருத்துவமனைக்கு வந்து ஆசிரியையை சந்தித்த மாவட்ட கல்வி அலுவலர் இது குறித்து விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.