​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
BCCI-யின் வீரர்கள் தேர்வுக் கொள்கை வெளிப்படையானது : கங்குலி

Published : Feb 23, 2018 7:35 PM



BCCI-யின் வீரர்கள் தேர்வுக் கொள்கை வெளிப்படையானது : கங்குலி

Feb 23, 2018 7:35 PM

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் தேர்வுக் கொள்கை மற்ற நாடுகளை விட சிறப்பாகவும், வெளிப்படையானதாகவும் இருப்பதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கோவை கொடீசியா அரங்கில் கண்மருத்துவம் தொடர்பான 76-வது அனைத்திந்திய மாநாடு நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மிகவும் தூய்மையான நகராக இருப்பதால் தனக்கு பிடித்திருப்பதாகத் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதாகத் தெரிவித்த அவர், இந்திய வீரர்கள் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாகக் கூறினார். இந்திய மகளிர் அணியினர் சிறுத்தைகளைப் போல் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.