​​ TTV தினகரனுடன் கள்ளக்குறிச்சி MLA பிரபு திடீர் சந்திப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
TTV தினகரனுடன் கள்ளக்குறிச்சி MLA பிரபு திடீர் சந்திப்பு


TTV தினகரனுடன் கள்ளக்குறிச்சி MLA பிரபு திடீர் சந்திப்பு

Feb 23, 2018 7:34 PM

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு, டிடிவி தினகரனை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு, இன்று முற்பகலில், சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்கு டிடிவி தினகரனை சந்தித்த பிரபு, அவருக்கு தம்முடைய ஆதரவைத் தெரிவித்தார். அப்போது, ஏற்கெனவே தகுநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ.க்களான பழனியப்பன், கதிர்காமு, சோளிங்கர் பார்த்திபன், ஆம்பூர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ பிரபு, மக்கள் ஆதரவு டிடிவி தினகரனுக்கே இருப்பதாலும், தன்னுடைய தொகுதி மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்ய முடியாததாலும், டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறினார்.