தமிழகத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 விழுக்காடாக குறைவு
Published : Sep 08, 2019 5:47 PM
தமிழகத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 விழுக்காடாக குறைவு
Sep 08, 2019 5:47 PM
தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் முதலுதவி சிகிச்சையை முறையாக பெற்றிருப்பதால் கடந்த ஓராண்டில் சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 விழுக்காடாக குறைந்துள்ளதாக ஏ.டி.ஜி.பி ஷகீல் அக்தர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிறந்த முறையில் முதலுதவி அளித்து மறுவாழ்வு கொடுத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், ஆயுதப்படை கூடுதல் ஏ.டி.ஜி.பி ஷகீல் அக்தர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னையில் மட்டும் வருடத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாக தெரிவித்த மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க பொதுமக்கள் முதலுதவி அளிக்கும் பயிற்சி பெறுவது அவசியம் என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஏ.டி.ஜி.பி ஷகீல் அக்தர், இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழகம் இரண்டாமிடம் வகிப்பதாக வேதனை தெரிவித்தார்.