​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரோலர் கோஸ்டரிலிருந்தபடி கீழே விழ முயன்ற செல்போனை பிடித்த சுற்றுலா பயணி

Published : Sep 08, 2019 12:56 PM

ரோலர் கோஸ்டரிலிருந்தபடி கீழே விழ முயன்ற செல்போனை பிடித்த சுற்றுலா பயணி

Sep 08, 2019 12:56 PM

ஸ்பெயின் நாட்டில், வேகமாக சுற்றிய ரோலர் கோஸ்டரிலிருந்து நபர் ஒருவர் தவறவிட்ட செல்போனை, அதில் பயணித்த மற்றொருவர் லாவகமாக பிடித்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்தை சேர்ந்த சாமுவேல் கெம்ப் என்பவர், தனது குடும்பத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தார். கேட்டலினா நகரில் உள்ள போர்ட் அவென்டுரா  என்ற பொழுதுபோக்கு பூங்காவுக்கு சென்ற அவர், வேகமாக சுற்றும் ஷம்பலா ரோலர் கோஸ்டரில் ரைடு செய்ய விரும்பியுள்ளார்.

சுமார் 130 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றும் அந்த கோஸ்டரில் அவர் ஏறி பயணிக்க தொடங்கியதும், சில நொடிகளில் ரோலர் கோஸ்டரில் இருந்த மற்றொரு நபரின் ஐபோன் X கீழே விழ முயன்றுள்ளது. இதனை பார்த்த சாமுவேல், ரோலர் கோஸ்டரில் இருந்தபடி தனது வலது கையால் செல்போனை லாவகமாக பிடித்தார்.

இந்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை சுமார் 35 லட்சம் பேர் பார்த்தது மட்டுமல்லாமல், பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.