​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலம் அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் -நண்பர்கள் 3 பேர் கைது

Published : Sep 08, 2019 10:53 AM

சேலம் அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் -நண்பர்கள் 3 பேர் கைது

Sep 08, 2019 10:53 AM

சேலம் அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மல்லூர் அருகில் உள்ள நாழிக்கல்பட்டியை சேர்ந்த திலீப்குமார் என்பவர் ராசிபுரத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்தார்.

கடந்த ஐந்தாம் தேதி நள்ளிரவில் திலீப்குமார் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக திலீப்குமாரின் முன்னாள் நண்பர்கள் சூர்யா என்கிற சரவணன் மற்றும் திருநாவுக்கரசு மற்றொரு சரவணன் ஆகிய 3 பேரை சனி மாலை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவர்கள் கொலைக்கு பயன்படுத்திய சூரி கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் நடனம் ஆடியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் கொலை செய்த தாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இருவரும் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தில் இருக்கும் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டனர்.