​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாடகைக் காரை சவாரிக்கு என அழைத்துச் சென்று கடத்திய கும்பல் கைது

Published : Sep 07, 2019 2:36 PM

வாடகைக் காரை சவாரிக்கு என அழைத்துச் சென்று கடத்திய கும்பல் கைது

Sep 07, 2019 2:36 PM

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வாடகைக் காரை சவாரிக்கு அழைப்பது போல் அழைத்துச் சென்று ஓட்டுநரைத் தாக்கிவிட்டு காரை கடத்திச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வியாழக்கிழமையன்று உப்பிலியாபுரம் கார் ஸ்டேண்டுக்குச் சென்ற 3 பேர் கும்பல், முபாரக் அலி என்பவரது டாடா இண்டிகா காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். துறையூர் வரை செல்ல வேண்டும் எனக் கூறி ஏறிய அவர்கள், சிறிது தூரம் சென்றதும் முசிறி செல்ல வேண்டும் எனக் கூறி மணல்மேடு அருகே ஆளரவமற்ற பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவர்களுடன் மேலும் இருவர் சேர்ந்துகொண்டு முபாரக் அலியை தாக்கிவிட்டு காரை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. முபாரக் அலி கொடுத்த தகவலின் பேரில் உப்பிலியாபுரம் போலீசார் விசாரணையில் இறங்கிய நிலையில், கடத்தல் பேர்வழிகள் காரின் பதிவு எண் பலகையை கழற்றிவிட்டு அரவக்குறிச்சியிலுள்ள ஸ்டிக்கர் கடை ஒன்றில் கொடுத்து ஸ்டிக்கர் ஒட்டக் கூறியுள்ளனர்.

சந்தேகமுற்ற கடைக்காரர் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுக்கவே, அங்கு வந்த போலீசார் விஜயகுமார், பெருமாள், ஜெகன், செந்தில்குமார் ஆகிய மூவரை கைது செய்தனர். சுதாகர் என்பவன் தப்பியோடிய நிலையில் அவனை தேடி வருகின்றனர்.