​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கால்நடைத்துறை அமைச்சர் குழு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம்

Published : Sep 06, 2019 8:54 PM

கால்நடைத்துறை அமைச்சர் குழு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம்

Sep 06, 2019 8:54 PM

கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக அறிந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா, நியூஸ்லாந்து நாடுகளுக்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

அமைச்சருடன், கால்நடைத்துறை இயக்குனர் ஞானசேகரன், தமிழ்நாடு கால்நடைப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் உள்ளிட்டோரும் செல்கின்றனர். சென்னையில் இருந்து இன்று இரவு புறப்படும் அமைச்சர் தலைமையிலான குழு முதலில் ஆஸ்திரேலியாவுக்கும், அங்கிருந்து நியூசிலாந்து நாட்டிற்கு செல்லவும் திட்டம் தீட்டியுள்ளனர்.

இருநாடுகளில் உள்ள 4 கால்நடை மருத்துவ, அறிவியல் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு குறித்தும் ஆய்வு செய்யவுள்ளதாகவும், அந்நாட்டில் உள்ள திட்டங்களை தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பயணத்தின்போது அந்நாடுகளில் உள்ள முதலீடுகளை ஈர்க்கும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.