​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாதவரத்தில் 3ஆவது மாடியிலிருந்து சிறுவன் கீழே விழுந்து பலி

Published : Sep 06, 2019 4:42 PM

மாதவரத்தில் 3ஆவது மாடியிலிருந்து சிறுவன் கீழே விழுந்து பலி

Sep 06, 2019 4:42 PM

சென்னை மாதவரம் பகுதியில் உள்ள குடியிருப்பின் 3ஆவது மாடியில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாதவரம் அலெக்ஸ் நகர் மெயின் ரோடு ஆர்.சி. அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் தனசேகரன். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு கார்த்தி மற்றும் வசந்தகுமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இதில் வசந்தகுமார், அங்குள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வந்தான். இந்நிலையில் குடியிருப்பின் 3ஆவது மாடியிலிருந்து வசந்தகுமார் கீழே விழுந்து உயிரிழந்தான்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த மாதவரம் போலீசார், வசந்தகுமாரின்  உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையின்போது, மாடியிலிருந்து வசந்தகுமார் தவறி விழுந்ததாக அவனது பெற்றோர் தெரிவித்தனர். ஆனால் மாடியிலுள்ள சுற்றுச்சுவரை போலீஸார் ஆய்வு செய்தபோது அது பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதனால் வசந்தகுமார் உண்மையில் தவறி விழுந்துதான் பலியானானா?அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டானா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.