​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டிஜிபி அலுவலகம் முன் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் தற்கொலை முயற்சி

Published : Sep 06, 2019 12:35 PM

டிஜிபி அலுவலகம் முன் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் தற்கொலை முயற்சி

Sep 06, 2019 12:35 PM

புதுச்சேரி டிஜிபி அலுவலகம் முன், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

புதுச்சேரியை சேர்ந்த மணிமாறன் என்பவர் ஆம் ஆத்மி கட்சியில் தொழிற்சங்க தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை தூமாஸ் வீதியில் உள்ள டிஜிபி அலுவலகம் வந்த மணிமாறன், திடீரென தான் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், பாட்டிலை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்தனர்.

தொடர்ந்து மணிமாறனை பெரியகடை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, போராளிகள் குழு என்ற பெயரில் சுந்தர் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அடிக்கடி பணம் கேட்டு தனது செல்போன் எண்ணுக்கு மிரட்டல் விடுப்பதாகவும், தனது குடும்பத்தையும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி வருவதாகவும் கூறினார். மேலும் சுந்தர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தான் டிஜிபி அலுவலகம் முன் தற்கொலைக்கு முயன்றதாகவும் மணிமாறன் தெரிவித்தார்.