​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

Published : Aug 31, 2019 9:17 PM

விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

Aug 31, 2019 9:17 PM

விநாயகர் சதுர்த்தியையொட்டி, மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

வருகிற திங்கள் கிழமை அன்று நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்திக்காக பூக்கள் வாங்க மதுரை பூ மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. பூக்களின் விலையானது கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு 750 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ, தற்போது 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 500ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த முல்லை 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கனகாம்பரம் ஒரு கிலோ 1500 ரூபாய்க்கும் ஜாதி மல்லி ஒரு கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.