​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் - கர்நாடக அரசின் பரிந்துரையை ஏற்று வழக்கு பதிவு செய்தது சி.பி.ஐ.

Published : Aug 31, 2019 9:09 PM

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் - கர்நாடக அரசின் பரிந்துரையை ஏற்று வழக்கு பதிவு செய்தது சி.பி.ஐ.

Aug 31, 2019 9:09 PM

கர்நாடகாவில் அரசியல் தலைவர்களின் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

அந்த மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. அந்த கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.

இந்த நிலையில் குமாரசாமி ஆட்சியின் போது முக்கிய தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர். இதையடுத்து, தொலைபேசி ஒட்டு கேட்பு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து கர்நாடகாவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரின் பல்வேறு தொலைபேசி உரையாடல்கள் சட்டவிரோத முறையில் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசின் உத்தரவு மற்றும் கர்நாடக அரசின் வேண்டுகோளுக்கேற்ப வழக்கு பதிவு செய்துள்ளதாக , சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.