​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய ஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது

Published : Aug 25, 2019 3:43 PM

மத்திய ஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது

Aug 25, 2019 3:43 PM

நாடு முழுவதும் நடைபெற்று வந்த ஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது.

ஆயுத தொழிற்சாலை வாரியம் மற்றும் அதன் கீழ் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 41 ஆயுத தொழிற்சாலைகளில் பணிபுரியும் 80 ஆயிரம் ஊழியர்கள் கடந்த 20ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த போராட்டம் ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆயுத உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்தது. இதனிடையே கடந்த வெள்ளியன்று ஆயுத உற்பத்தித் துறை செயலாளர் உட்பட அரசு பிரதிநிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும், திங்கள் முதல் ஆயுத தொழிற்சாலை ஊழியர்கள் பணிக்கு செல்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத தொழில் துறையை தனியார்மயமாக்குவதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் இதுகுறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசு தரப்பு அதிகாரி உறுதியளித்ததால் ஊழியர்கள் பணிக்கு செல்வார்கள் எனவும் கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அரசு தரப்பு உறுதியளித்ததுபோல பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றால் மீண்டும் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.