​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெட் ஏர்வேஸ் - நரேஷ் கோயல் வீடு அலுவலகங்களில் சோதனை

Published : Aug 24, 2019 7:33 AM

ஜெட் ஏர்வேஸ் - நரேஷ் கோயல் வீடு அலுவலகங்களில் சோதனை

Aug 24, 2019 7:33 AM

டெல்லியிலும் மும்பையிலும் உள்ள ஜெட் ஏர்வேஸ் தலைவராக இருந்த நரேஷ் கோயலின் 12 வீடுகளிலும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

பல்வேறு முறைகேடுகள் புகார்கள் மற்றும் உளவுத்துறையினரின் தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயலின் வர்த்தக சாம்ராஜ்யம் 19 தனியார் நிறுவனங்களை உள்ளடக்கியவையாகும்.

இதில் 14 நிறுவனங்கள் இந்தியாவிலும் 5 நிறுவனங்கள் வெளிநாடுகளிலும் உள்ளன. ஐல்ஆஃப் மேன்- தீவில் தொடங்கப்பட்ட Tailwinds corporation என்ற நிறுவனம்தான் ஜெட் ஏர்வேசின் நிதி விவகாரங்களைக் கட்டுப்படுத்தியது.

துபாயில் இந்நிறுவனத்தின் கிளையில் மிகப்பெரிய முதலீடுகளை செய்த ஹஸ்முக் தீப்சந்த் என்பவரின் வீட்டிலும் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  நிதி நெருக்கடி காரணமாகவும், வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாமலும், ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமலும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தடுமாறியது.

ஜெட் ஏர்வேஸ்  8 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் கடனில் சிக்கியுள்ளது. நிலுவையில் உள்ள சம்பளம் உட்பட பல்வேறு கடன்களை கருத்தில் கொண்டால் விமான நிறுவனம் 11ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் இருக்கிறது. 

இதையடுத்து அந்த நிறுவனம் அனைத்து சேவைகளையும் ஏப்ரல் முதல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.  கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின்ஆய்வு அறிக்கையில் விமான நிறுவனத்தின் நிதி பரிமாற்றத்தில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜூலை மாதம் தகவல் வெளியாகியது.

நரேஷ் கோயல் விமான நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகினார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எதிரான திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.