​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அன்னிய நேரடி முதலீடு தொடர்பான விதிமீறல் புகார் - ஜெட் ஏர்வேஸ் நிறுவனரின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Published : Aug 23, 2019 5:47 PM



அன்னிய நேரடி முதலீடு தொடர்பான விதிமீறல் புகார் - ஜெட் ஏர்வேஸ் நிறுவனரின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Aug 23, 2019 5:47 PM

அன்னிய நேரடி முதலீடு தொடர்பான விதிமீறல் புகாரின் பேரில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

நிதி நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டு விமானங்கள் தற்காலிகமாக வாடகைக்கு விடப்பட்டு வருகின்றன.

நரேஷ் கோயல் நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகினார். இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன நிதியை வேறு வழிகளில் மாற்றியது உள்ளிட்ட பெருமளவிலான முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக பெரு நிறுவன விவகாரங்கள்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனமான எடிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways) நிறுவனம் முதலீடு செய்ததில் விதிமீறல்கள் நடந்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் டெல்லி மற்றும் மும்பையில் நரேஷ் கோயல் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.