​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரியல் எஸ்டேட் அதிபர்.. வெட்டிச் சாய்த்த கும்பல்..!

Published : Aug 22, 2019 10:36 AM

ரியல் எஸ்டேட் அதிபர்.. வெட்டிச் சாய்த்த கும்பல்..!

Aug 22, 2019 10:36 AM

மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டியும், குத்தியும் கொல்லப்பட்ட சம்பவத்தின் பதைபதைப்பூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சேவல் சண்டை தகராறில் கொலை நடந்திருக்கக் கூடும் என முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை கே.புதூர் ராமவர்மநகரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். நேற்றிரவு கே.புதூர் பாரதியார் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார்.

தெருக்கள் வழியாக சென்று கொண்டிருந்த போது, ஒரு இடத்தில் மறைந்திருந்த மர்மக்கும்பல் ஒன்று பெரிய கல்லைத் தூக்கி ராஜா மீது வீசியது. இதில் நிலைகுலைந்த அவர், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார்.

பட்டாக் கத்திகளுடன் துரத்திய கும்பலைப் பார்த்ததும், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். ஆனால் அவரைத் துரத்திப் பிடித்த கும்பல், கத்தியால் சரமாரியாக கழுத்து, தலை, கால் உள்ளிட்ட இடங்களில் கொடூரமாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற கே.புதூர் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களைச் சேகரித்தனர். கொலை தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளையும் கைப்பற்றி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

சேவல் சண்டை தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தால் கொலை நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2016ஆம் ஆண்டில் வாடிப்பட்டியில் நடந்த சேவல் சண்டையில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதில், ராஜாவுக்கு தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு பழிக்குப்பழியாக இச்சம்பவம் நடைபெற்றிருக்கக் கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.