​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரிசர்வ் வங்கியின் கொள்கை -ஆலோசனைக் கூட்டம்

Published : Aug 22, 2019 6:26 AM



ரிசர்வ் வங்கியின் கொள்கை -ஆலோசனைக் கூட்டம்

Aug 22, 2019 6:26 AM

ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் 5 ஆண்டு பொருளாதார மந்த நிலை குறித்து கவலை தெரிவித்தார். பொருளாதார மேம்பாட்டுக்கு மிகப்பெரிய அளவிலான ஊக்கம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.ஒரே மாதத்தில் நான்காவது முறையாகக் கூடிய ரிசர்வ் வங்கி அதிகாரிகள், தொடர்ச்சியாக இந்த முறையும் வட்டி விகிதங்களைக் குறைக்க ரிசர்வ் வங்கியின் பொருளாதார கண்காணிப்புக்குழுவின் 6 உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தனர்.

பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் போன்ற காரணங்களால் வர்த்தகம் முன்பு போல் இருக்காது. இந்நிலையில் வங்கிகள் மூலமாக மிகப்பெரிய ஊக்கம் தேவைப்படும் என்று சக்தி கந்ததாஸ் அறிவுறுத்தியுள்ளார்.