​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாலியல் உறவு பகிர்வு கலாச்சாரத்தை வரவேற்கும் வகையான பழம்பெரும் நடனக் கலைஞர் சரோஜ் கானின் பேச்சால் சர்ச்சை

Published : Apr 24, 2018 11:26 PM

பாலியல் உறவு பகிர்வு கலாச்சாரத்தை வரவேற்கும் வகையான பழம்பெரும் நடனக் கலைஞர் சரோஜ் கானின் பேச்சால் சர்ச்சை

Apr 24, 2018 11:26 PM

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுவதை வரவேற்கும் விதமாக பழம்பெரும் நடன கலைஞர் சரோஜ் கான் ((Saroj Khan)) பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சரோஜ் கான், பாலியல் தொந்தரவு, வன்கொடுமை என்பது அரசுத் துறைகளில் கூட இருப்பதாக தெரிவித்தார். மற்ற துறைகளை பொருத்தவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, கைவிட்டு விடுவார்கள் என்றும், ஆனால் சினிமாவில் வாய்ப்புக்காக இணங்கிச் சென்றால், வேலைவாய்ப்பாவது கிடைக்குமே என்று சரோஜ் கான் பேசியது நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திறமை இருக்கும் பெண் ஏன் உடன்பட வேண்டும் என்றும் சரோஜ் கான் கூறியுள்ளார்.