​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நல்ல மழை

Published : Aug 20, 2019 8:26 PM

சென்னை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நல்ல மழை

Aug 20, 2019 8:26 PM

சென்னை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல  மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. தொடரும் மழையால் பல ஊர்களில் நீர்நிலைகள் நிரம்பத் தொடங்கி உள்ளன.

சென்னை

சென்னையில் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு, ராயபுரம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

தேனி 

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தேவதானப்பட்டி, தாமரைக்குளம், கும்பக்கரை, சோத்துப்பாறை உள்ளிட்ட ஊர்களில் மிதமான மழை பெய்துள்ளது.

விருதுநகர் 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து நீடித்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

புதுக்கோட்டை 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

நாகை

நாகையில் வேளாங்கண்ணி, தெற்குப்பொய்கைநல்லூர், நாகூர், கருவேலங்கடை, மஞ்சக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.