​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உடற்கல்வி சிறப்பாசிரியர் பதவிக்கு தகுதியானவர்களாக கருத கோரிய வழக்கு

Published : Aug 20, 2019 6:13 PM

உடற்கல்வி சிறப்பாசிரியர் பதவிக்கு தகுதியானவர்களாக கருத கோரிய வழக்கு

Aug 20, 2019 6:13 PM

உடற்கல்வி சான்றிதழ் படிப்பு, பட்டய படிப்பு படித்தவர்களையும் உடற்கல்வி சிறப்பாசிரியர் பதவிக்கு தகுதியானவர்களாக கருதி, ஏற்கனவே தேர்வானவர்களுடன் இணைத்து பணி வழங்க பரிசீலிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 632 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கென கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இதில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 632 பேரின் பெயர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், உரிய கல்வி தகுதி இல்லை தேர்வு எழுதிய பலர் நிராகரிக்கப்பட்டனர்.

இதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த செயலை எதிர்த்து மலர்விழி உள்ளிட்ட பலர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், 26.7.2017 வெளியிடப்பட்ட அறிவிப்பாணை முறையாக இல்லை என கூறி, தேர்வுப் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார். இருப்பினும் இதனை எதிர்த்து திருவள்ளூரை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட பலர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் சுந்தர் அமர்வு, உடற்கல்வி சான்றிதழ் படிப்பு, பட்டய படிப்பு படித்தவர்களையும் தகுதியானவர்களாக கருதி, ஏற்கனவே தேர்வானவர்களுடன் இணைத்து இவர்களுக்கும் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த உத்தரவு, நிவாரணம் கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெளிவுப்படுத்தி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.