​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீடியோ ஸ்ட்ரீமிங் சந்தையில் கால்பதிக்கும் ஆப்பிள் நிறுவனம்

Published : Aug 20, 2019 5:05 PM

வீடியோ ஸ்ட்ரீமிங் சந்தையில் கால்பதிக்கும் ஆப்பிள் நிறுவனம்

Aug 20, 2019 5:05 PM

பன்னாட்டுச் சந்தையில், வீடியோ ஸ்ட்ரீமிங் போட்டியாளர்களை சமாளிக்க, ஆப்பிள் நிறுவனம், தனது தொலைக்காட்சி பிரிவில், 600 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறது.

வேண்டியதை, வேண்டும் நேரத்தில், கையடக்க கணினிகள், மடிக்கணிகள், இணைய கணினிகள் மற்றும் ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் வாயிலாக, அவரவர் இடத்திற்கே கொண்டுவரும் தொழில்நுட்பம், வீடியோ ஸ்ட்ரீமிங்... பன்னாட்டளவில், லைவ் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் சந்தையில், Netflix, Disney மற்றும் HBO-வின் AT&T உள்ளிட்ட நிறுவனங்கள், கொடிகட்டி பறக்கின்றன.

இந்த வீடியோ ஸ்ட்ரீமிங் சந்தையில், ஆப்பிள் நிறுவனமும், வருகிற நவம்பர் மாதம் இணைய இருக்கிறது. இதையொட்டி, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட போட்டியாளர்களை சமாளிக்கும் வகையில், 600 கோடி அமெரிக்க டாலர்களை, தனது ஆப்பிள் டிவி பிளஸ் பிரிவில், ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்கிறது. இந்த தொகை முழுவதும், சீரியல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தயாரிக்கவும், திரைப்படங்களை வாங்குவதற்காகவும், செலவு செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு, 600 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும் ஆப்பிள் நிறுவனம், இதில், நடிகைகள் ஜெனிஃபர் ஆனீஸ்டன்((Jennifer Aniston)), ரீசி விதர்ஸ்பூன் ((Reese Witherspoon)), நடிகர் ஸ்டீவ் கேரல் ((Steve Carell)) ஆகியோரை கொண்டு, தொடர்களாக தயாரிக்கப்படும் The Morning Show என்ற நிகழ்ச்சிக்கு மட்டும், நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை அள்ளித் தெளிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.