​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், மிஷனரிகள் பற்றிய கருத்துகள் நீக்கம்

Published : Aug 20, 2019 3:37 PM

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், மிஷனரிகள் பற்றிய கருத்துகள் நீக்கம்

Aug 20, 2019 3:37 PM

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என்ற கருத்தை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியிருக்கிறது.

சென்னை, தாம்பரம், கிறிஸ்தவ கல்லூரியின், விலங்கியல் துறை மாணவ - மாணவிகள், கடந்த ஜனவரி மாதம் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.  7 பேராசிரியர்கள் இவர்களை சுற்றுலா அழைத்து சென்றனர். கல்வி சுற்றுலா முடிந்து திரும்பியதும், 34 மாணவிகள் கையெழுத்திட்டு, இரண்டு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கூறினர்.

விசாகா கமிட்டியின் விசாரணையைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் பணிநீக்க நோட்டீஸ் அளித்தது. இதை எதிர்த்து பேராசிரியர் ஒருவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், கிறிஸ்தவ நிறுவனங்கள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

இந்நிலையில் வழக்குக்கும், இந்த கருத்துக்கும் எந்த தொடர்பில்லை என கிறிஸ்தவ கல்லூரி தரப்பில் நீதிபதி வைத்தியநாதன் முன் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதி வைத்தியநாதன், ஏற்கனவே இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், 32ஆவது பத்தி முழுவதுமாக நீக்கப்படுவதாக ஆணையிட்டார்.

இதன்படி, கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என்ற கருத்தை நீக்கியுள்ளார்.

மேலும், கிறிஸ்தவ மிஷனரிகள், கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன என்ற கருத்தையும் நீக்குவதாக நீதிபதி வைத்தியநாதன் தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.