​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்றதாகக் கூறப்படும் வெளிமாநில மாணவர்கள் 126 பேருக்கு நோட்டீஸ்

Published : Aug 19, 2019 5:57 PM

மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்றதாகக் கூறப்படும் வெளிமாநில மாணவர்கள் 126 பேருக்கு நோட்டீஸ்

Aug 19, 2019 5:57 PM

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வில் பங்கேற்றதாக கூறப்படும் வெளிமாநிலத்தவர் 126 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் இந்த ஆண்டு 126 வெளிமாநில மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.

எனவே 2019- 2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் கலந்தாய்வை ரத்து செய்து அறிவிக்க வேண்டும். மேலும் இளங்கலை  மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் இருந்து வெளிமாநில மாணவர்களை நீக்கவும், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், வெளி மாநில மாணவர்கள் என கூறப்படும் 126 மாணவர்கள் எதன் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொண்டனர் என்பது குறித்தும் அவர்களின் இருப்பிட சான்று குறித்தும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 26 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.