​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருநெய்பேர் வாய்கால் தூர்வாரும் பணியை பார்வையிட்டார் அமைச்சர் காமராஜ்

Published : Aug 19, 2019 3:17 PM

திருநெய்பேர் வாய்கால் தூர்வாரும் பணியை பார்வையிட்டார் அமைச்சர் காமராஜ்

Aug 19, 2019 3:17 PM

திருவாரூர் மாவட்டம் மாங்குடியில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் நடந்து வரும் திருநெய்பேர் வாய்கால் பணியை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய ஆட்சிப்பணி அதிகாரி அரவிந்த் என்பவர் கணிப்பு ஆய்வு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுபடி தனி பிரிவு அலுவலர், மாவட்டம் முழுவதும் அனைத்து வாய்க்கால்களையும் ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.

ஆண்டுதோறும் தூர்வாரப்படுகின்ற பணியுடன் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் மூலம் 14 புள்ளி 85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 48 பணிகள் திட்டமிடப்பட்டதாகவும் அதில் 30 பணிகள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

இதன்மூலம் விவசாயத்திற்கு எந்தவித தங்கு தடையுமின்றி நீரை கொண்டு செல்லும் வகையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.