​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Published : Aug 19, 2019 1:09 PM



பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Aug 19, 2019 1:09 PM

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், நாமக்கல், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பல இடங்களில் பரவலாகவும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் கனமழை பதிவாகி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 17 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வேலூர் மாவட்டம் மேல் ஆலத்தூர், ஆம்பூரில் தலா 12 செண்டி மீட்டர், குடியாத்தத்தில் 9 செண்டி மீட்டர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, மதுரை விமான நிலையத்தில் தலா 8 செண்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டம் வானூர் ஆகிய இடங்களில் தலா 6 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.