​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்துகொள்வோர் 19 சதவீதமாக ஆக உயர்வு - அமைச்சர்

Published : Aug 19, 2019 12:43 PM



அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்துகொள்வோர் 19 சதவீதமாக ஆக உயர்வு - அமைச்சர்

Aug 19, 2019 12:43 PM

அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்பவர்களது சதவீதம் 2ல் இருந்து 19ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் காது கேட்கும் கருவிகள் இலவசமாக வழங்கும் விழா மற்றும் ரத்த சுத்திகரிப்புப் பிரிவு துவக்க விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளுக்காக ஆயிரம் டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.