​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

Published : Aug 19, 2019 12:24 PM



தருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

Aug 19, 2019 12:24 PM

தெஹல்கா ஊடகத்தின் நிறுவனரும் ஆசிரியருமான தருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தருண் தேஜ்பால் மீதான புகார் தீவிரமானது என்றும் பாதிக்கப்பட்டவரின் தனியுரிமை மீதான தாக்குதல் என்றும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தருண் தேஜ்பால் மீதான பாலியல் புகார் வழக்கை ஆறுமாதத்துக்குள் விசாரித்து முடிக்க கோவா நீதிமன்றத்துக்கு கெடுவிதித்துள்ளனர். தருண் தேஜ்பால் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவர், அவர் மீது பாலியல் புகார் தெரிவித்து வழக்குத் தொடர்ந்தார்.

கோவாவில் ஒரு தங்கும் விடுதியின் லிப்டில் வைத்து தருண் தேஜ்பால் தன்னிடம் அத்துமீறினார் என்பது அந்தப் பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் விளைவாக கடந்த 2013ம் ஆண்டில் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டு, 2014 ல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது, அரசியல் பழிவாங்கல் என்று வாதாடிய தருண் தேஜ்பால் தரப்பு வழக்கறிஞர்கள், வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

கோவா ஓட்டலின் சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் இருதரப்பு விசாரணைகளும் முடிந்து தீர்ப்பு வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.