​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் வன்முறைகளை நிறுத்தக்கோரி பேரணி

Published : Aug 19, 2019 12:14 PM

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் வன்முறைகளை நிறுத்தக்கோரி பேரணி

Aug 19, 2019 12:14 PM

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களை நிறுத்தக்கோரி சர்வதேச அளவில் பல்வேறு பகுதிகளில் பேரணி நடைபெற்றது.

ஹாங்காங்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சீனாவுக்கு அழைத்து சென்று விசாரிக்கும் மசோதாவை கைவிட வலியுறுத்தி பெரியளவிலான போராட்டங்கள் நடைபெற்றதையடுத்து அந்த மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், ஹாங்காங் மற்றும் சீன அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களின்போது வன்முறைகளும் வெடித்தன.

இந்நிலையில் ஹாங்காங்கில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை நிறுத்தக்கோரி பல நாடுகளில் சீனர்களின் பேரணி நடைபெற்றது. கனடாவில் வசித்து வரும் சீனர்கள், தலைநகர் டொராண்டோவில் பேரணியாக சென்றனர்.

ஒரே சீனா என்ற முழக்கங்களை எழுப்பியும், நாட்டுப்பற்று பாடல்களை பாடியும் பேரணி நடத்தப்பட்டது. மேலும் கனடாவின் வான்கூவர், வின்னிபெக் மற்றும் கல்கேரி நகரங்களிலும் இதே போன்ற போராட்டங்கள் நடைபெற்றன.

இதேபோல லண்டனின் டிராஃபல்கர் சதுக்க பகுதியிலும் வெளிநாடு வாழ் சீனர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பேரணி நடத்தினர்.

ஒரே நாடு, ஒரே சீனா என்றும் ஹாங்காங்கும் சீனாவின் ஒரு பகுதி தான் என்றும் கூறி சீன கொடியை ஏந்தியப்படி பேரணி நடைபெற்றது. பெர்லின், பாரிஸ் உட்பட ஐரோப்பிய நகரங்கள் சிலவற்றிலும் சீனர்களின் பேரணிகள் நடைபெற்றன.

இதனிடையே, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், ஹாங்காங் போராட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்கள், ஒரே நாடு, இரண்டு அமைப்பு என்பதன் மூலம், ஹாங்காங்கின் தன்னாட்சி அந்தஸ்து பேணி பாதுகாக்கப்படும் என்று கூறினர்.