​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடற்கரை ரயில் நிலையத்தில் தடம்புரண்ட மின்சார ரயில்

Published : Aug 19, 2019 11:56 AM



கடற்கரை ரயில் நிலையத்தில் தடம்புரண்ட மின்சார ரயில்

Aug 19, 2019 11:56 AM

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், மின்சார ரயில் தடம் புரண்டது. இன்று அதிகாலை 5.45 மணி அளவில் கடற்கரை நிலைய பணிமனையில் இருந்து மின்சார ரயில் ஒன்று நடைமேடை நோக்கி புறப்பட்டது.

அப்போது முதல் வகுப்புப் பெட்டியின் நான்கு சக்கரங்கள், தண்டவாளத்தை விட்டு இறங்கின. இதை அறிந்த எஞ்சின் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி விட்டு ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்த ஊழியர்கள் ஒரு மணிநேரம் போராடி ரயிலை மீட்டனர். ரயில் தடம் புரண்ட போதிலும் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.