​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்தது

Published : Aug 19, 2019 11:38 AM



தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்தது

Aug 19, 2019 11:38 AM

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.

ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. பல்வேறு புதிய உச்சங்களை எட்டி விற்பனையான தங்கம், சவரனுக்கு 29 ஆயிரம் ரூபாயையும் கடந்து விற்பனையானது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 160 ரூபாய் குறைந்து, 28 ஆயிரத்து 696 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 20 ரூபாய் குறைந்து மூவாயிரத்து 587 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி விலையும் கிராமுக்கு 10 காசுகள் குறைந்துள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 47 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 100 ரூபாய் குறைந்து 47 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.