​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோப ராமானுஜத்துக்கு போலீசார் சம்மன்

Published : Aug 19, 2019 10:46 AM



ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோப ராமானுஜத்துக்கு போலீசார் சம்மன்

Aug 19, 2019 10:46 AM

மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த மாதம் 27ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த, ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோபராமானுஜம் காஞ்சி அத்திவரதர் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார்.

அத்திவரதர் மேலே வந்ததால் தான் மழை பொழிவதாகக் கூறிய அவர், அவரை மீண்டும் குளத்தினுள் வைக்கக் கூடாது எனவும் கூறினார். அப்போது ஒரு மதத்தினரை புண்படுத்தும் வகையில் ஜீயர் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மத உணர்வை தூண்டும் வகையில் ஜீயர் பேசியதாக, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சையது அலி என்பவர் முதலமைச்சரின் தனிப் பிரிவில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல்நிலையத்தில் வரும் 22ம் தேதிக்குள், நேரில் ஆஜராகுமாறு ஜீயர் சடகோப ராமானுஜத்துக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.