​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம்" இன்று தொடக்கம்

Published : Aug 19, 2019 7:50 AM



முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம்" இன்று தொடக்கம்

Aug 19, 2019 7:50 AM

மக்களின் குறைகளை, நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குச் நேரடியாகச் சென்று நிவர்த்தி செய்யும், "முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை", சேலம் மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். 

சட்டப்பேரவையில், கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இந்த புதிய திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின் கீழ், நகரங்களில் உள்ள வார்டுகள், கிராமங்கள் தோறும் நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், அந்த மனுக்கள் மீது தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

உரிய விளம்பரத்திற்கு பின், ஒரு குறிப்பிட்ட நாளில் வருவாய், ஊரக, நகர்புற வளர்ச்சித் துறையை சேர்ந்த அரசு அலுவலர் குழு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சென்று மனுக்களைப் பெறுவார்கள். அந்த மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்பட்டு மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு எட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் தமிழ்நாடு அரசின் முக்கியத் திட்டமான, முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை, சேலம் மாவட்டத்தில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்