​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வரலாற்றுச் சின்னங்களை மீட்டு பாதுகாக்க மக்கள் கோரிக்கை

Published : Aug 19, 2019 7:37 AM



வரலாற்றுச் சின்னங்களை மீட்டு பாதுகாக்க மக்கள் கோரிக்கை

Aug 19, 2019 7:37 AM

ஓசூர் பகுதியில் உள்ள வரலாற்றுச் சின்னங்களை மீட்டு பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

கிருஷ்ண தேவராய மன்னர் ஆட்சி செய்த பகுதியான கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக எல்லைப்பகுதியான ஓசூர் பல்வேறு சிறப்புகளை உடையது.ஓசூரை ஆண்ட சோழர்கள் உள்ளிட்ட குறுநில மன்னர்கள் பல்வேறு வழிபாட்டுத் தலங்களை நிறுவியுள்ளனர்.பல பழைமை வாய்ந்த கோவில்கள் இப்பகுதியில் உள்ளன. அக்காலத்தின் கல்வெட்டுகள, ஆட்சியைக் குறிக்கும் நடுக்கற்கள், வீரக்கற்கள் என ஓசூர் பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான வரலாற்று ஆவணங்கள், ஆதாரங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

ஓசூர் தேர்ப்பேட்டை, மத்தம் அக்ரகாரம் ஆகிய பகுதிகளிலும் அந்த வரலாற்று சின்னங்களை காண முடிகிறது. அடுத்த தலைமுறையினரும் ஓசூர் வரலாற்றை அறிந்துக் கொள்ளும் வகையில் இந்த கல்வெட்டுகளை மீட்ட பாதுகாக்க கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் விஷ்ணு கோவில் அமைந்துள்ளது. இங்கும் சமணர்கள் தியானம் செய்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இப்பகுதியை சுற்றுலாத் தலமாக்கவும் தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.