​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்

Published : Aug 19, 2019 7:09 AM



போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்

Aug 19, 2019 7:09 AM

புதுச்சேரியில் மதுபோதையில் கார் ஒட்டி இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது மோதிய நபரை பொதுமக்கள் சுற்றிவளைத்து தாக்கினர்.

சாரம் பகுதியை சார்ந்த கார்த்திகேயன் என்பவர் தனது நண்பருடன் நேற்று இரவு காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அவரின் கார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த ஒருவர் மீது மோதியது. தொடர்ந்து ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதி பின்னர் அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சதீஷ் மற்றும் சிங்காரவேலன் ஆகியோர் காயமடைந்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் ஆவேசமடைந்து கார்த்திகேயனை சுற்றி வளைத்துத் தாக்கினர்.

தகவல் அறிந்து சமப்வ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் நடத்திய விசாரணையில், கார்த்திகேயன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.