​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடிக்கு நடிகர் சத்ருகன் சின்ஹா மனம் திறந்து பாராட்டு

Published : Aug 19, 2019 7:03 AM



பிரதமர் மோடிக்கு நடிகர் சத்ருகன் சின்ஹா மனம் திறந்து பாராட்டு

Aug 19, 2019 7:03 AM

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகர் சத்ருகன் சின்ஹா பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமரின் குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட கருத்துகளுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து இரண்டாவது பாராட்டு கிடைத்துள்ளது. மிகவும் தைரியமான பேச்சு என்றும் சிந்தனையைத் தூண்டும் வகையில் சிறப்பான ஆய்வுகளுடன் கூடிய உரை என்றும் சத்ருகன் சின்ஹா பாராட்டியுள்ளார்.

நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை குறித்து மிகச்சிறப்பான முறையில் பிரதமர் வெளிப்படுத்தியிருந்தார் என்றும் சத்ருகன்சின்ஹா டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்த சத்ருகன்சின்ஹா, பாட்னா சாகிப் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மத்திய அமைச்சரான ரவிசங்கர் பிரசாத்திடம் தோல்வியைத் தழுவினார்.