​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அத்திவரதர் ஓர் ஆன்மிக புரட்சியையையே ஏற்படுத்தியுள்ளார் -தமிழிசை செளந்தரராஜன்

Published : Aug 18, 2019 8:18 PM

அத்திவரதர் ஓர் ஆன்மிக புரட்சியையையே ஏற்படுத்தியுள்ளார் -தமிழிசை செளந்தரராஜன்

Aug 18, 2019 8:18 PM

அத்திவரதர் ஓர் ஆன்மிக புரட்சியையையே ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் நடந்த பாஜக பிரமுகர் இல்ல காதணி விழாவில் அவர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பள்ளிகளில் சத்துணவுடன் சேர்த்து வாழைப்பழம் மற்றும் பால் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் வாழை விவசாயிகளும் இதனால் பலன் அடைவார்கள் என தெரிவித்தார்.

அத்திவரதர் குறித்து கூறிய அவர், அத்திவரதர் ஆன்மிக புரட்சியையே ஏற்படுத்தியுள்ளதாகவும், நாத்திகவாதிகள் மற்றும் பகுத்தறிவாளர்கள் என தங்களைக் கூறிக்கொள்வோர்கூட அத்திவரதரைச் சுற்றிச் சுற்றி வந்ததை பார்க்கமுடிந்தது ஆரோக்கியமான மாற்றம் எனவும் அவர் தெரிவித்தார்.