​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில் சிலிண்டர் வெடித்து விபத்து

Published : Aug 18, 2019 7:44 PM

கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில் சிலிண்டர் வெடித்து விபத்து

Aug 18, 2019 7:44 PM

சென்னை தாம்பரம் அருகே, கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில், சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், ஒருவர் கால் துண்டிக்கப்பட்டது.

படுகாயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடோனில், பழைய பொருட்களை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், பழைய சிலிண்டர் ஒன்றை உடைக்க முயன்றனர். எதிர்பாராதவிதமாக சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியுள்ளது.

இதில் சிட்டிபாபு, கண்ணபிரான், சதீஷ், வேதநாயகம் ஆகிய 4 பேருக்கு, கை, கால், கண், காது உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, தாம்பரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிட்டிபாபுவிற்கு இடது கால் துண்டிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே ஆத்திரம் அடைந்த உறவினர்கள், பூங்கா நிர்வாகியுடனும், போலீசாருடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விபத்து தொடர்பாக சோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.