​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் இருசக்கர வாகனங்களை திருடிய 4 பேர் கைது

Published : Aug 18, 2019 5:34 PM



சென்னையில் இருசக்கர வாகனங்களை திருடிய 4 பேர் கைது

Aug 18, 2019 5:34 PM

சென்னை சோழிங்கநல்லூர் அருகே இருசக்கர வாகனங்களை திருடிய 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி பகுதிகளில், அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதையடுத்து, போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி வீடியோ காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் குமரன் நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, நந்தா என்ற நந்தகுமார், முருகன் என்ற கண்மூடி முருகன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்கள் 4 ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் அளித்த தகவலின் பேரில் கூட்டாளிகளான முருகன் என்ற பூபாலன், செல்வம் என்ற கணேசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.