​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகன் கொலை வழக்கில் போலீசார் அலட்சியம் காட்டுவதாகக் கூறி தந்தை தற்கொலை

Published : Aug 18, 2019 3:16 PM



மகன் கொலை வழக்கில் போலீசார் அலட்சியம் காட்டுவதாகக் கூறி தந்தை தற்கொலை

Aug 18, 2019 3:16 PM

ராஜஸ்தான் மாநிலத்தில் கும்பல் தாக்குதலில் இளைஞர் பலியான வழக்கில் போலீசார் அலட்சியம் காட்டுவதாகக் கூறி இளைஞரின் தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், உரிய நடவடிக்கை கோரி அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் அருகே கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி, இருசக்கர வாகனத்தில் சென்ற ஹரிஷ் ஜாதவ் என்ற இளைஞர், பெண் ஒருவரின் மீது மோதியதால், அப்பகுதியிலிருந்தவர்கள் கும்பலாக சேர்ந்து ஹரிஷை தாக்கினர்.

இதில் பலத்த காயமடைந்த ஹரிஷ் மேல்சிகிச்சைக்காக டெல்லி சப்தார்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்நிலையில் ஹரிஷ் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகக் கூறி, அவரது தந்தை ராட்டிராம் சுதந்திர தினத்தன்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் இருவரது மரணத்துக்கும் நீதி கோரி கடந்த 3 நாட்களாக ராட்டிராமின் உடலை தகனம் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரிஷின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதோடு, ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில் கர்ப்பிணியாக இருக்கும் ஹரிஷின் மனைவிக்கு அரசுவேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டம் தீவிரமடைந்து வருவதால், போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர்.