​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உயர்நீதிமன்ற ஆணை பெற்று ஆத்துப்பாளையம் அணை திறக்கப்படும் -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Published : Aug 18, 2019 12:43 PM

உயர்நீதிமன்ற ஆணை பெற்று ஆத்துப்பாளையம் அணை திறக்கப்படும் -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Aug 18, 2019 12:43 PM

கரூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் அணையில் உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்று தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆத்தூரை அடுத்த கள்ளிப்பாளையம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்று நடும் விழாவினை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கசிவு நீர் கரூர் ஆத்துப்பாளையம் அணைக்கு வந்து கொண்டிருப்பதாகவும், ஆத்துப்பாளையம் அணையில் தண்ணீர் திறப்பது சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருப்பதால், உயர்நீதிமன்றத்தை நாடி தண்ணீர் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதன் மூலம் அரவக்குறிச்சி, கரூர் ஒன்றியங்களில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்  பாசன வசதி பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.