​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கூவத்தில் குளித்துவிட்டு சாமி கும்பிடும் நிலை நிச்சயம் வரும் -அமைச்சர் ஜெயக்குமார்

Published : Aug 17, 2019 6:37 PM

கூவத்தில் குளித்துவிட்டு சாமி கும்பிடும் நிலை நிச்சயம் வரும் -அமைச்சர் ஜெயக்குமார்

Aug 17, 2019 6:37 PM

கூவத்தில் குளித்துவிட்டு சாமி கும்பிடும் நிலை நிச்சயம் வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

முதலீடுகளை ஈர்க்கவும், மக்களின் நலனுக்காகவுமே முதலமைச்சர் வெளிநாடு செல்வதாக அமைச்சர் குறிப்பிட்டார். கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் நடைபெறுவதாக கூறிய அமைச்சர் ஜெயக்குமார், இயற்கை இடர்பாடு வரும்போது அரசை பகையாளியாக பார்க்கும் எதிர்க்கட்சிகளின் கண்ணோட்டம் மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.