​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடியுடன் குல்தீப் செங்கார் புகைப்பட விளம்பரம் , பாஜக தலைவர்கள் கருத்துக் கூறுவார்களா? - பிரியங்கா கேள்வி

Published : Aug 17, 2019 4:48 PM

பிரதமர் மோடியுடன் குல்தீப் செங்கார் புகைப்பட விளம்பரம் , பாஜக தலைவர்கள் கருத்துக் கூறுவார்களா? - பிரியங்கா கேள்வி

Aug 17, 2019 4:48 PM

பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏ குல்தீப் செங்கார் புகைப்படம் இருக்கும் விளம்பரம் குறித்து பாஜகவின் பெரிய தலைவர்கள் கருத்து கூறுவார்களா? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறுமியை பலாத்காரம் செய்ததோடு, அவரது தந்தையை கொலை செய்ததாகவும் உன்னாவ் எம்எல்ஏ குல்தீப் மீது குற்றம்சாட்டப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் நிலையில் அப்பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் உள்ளூர் பத்திரிக்கையில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட குல்தீப் செங்கார் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை உன்னாவ் பாஜகவினர் விளம்பரமாக அளித்துள்ளனர்.

இது குறித்து போதும் பொறுமைக்கும் அளவுண்டு என்பதுபோல் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, சிபிஐ அறிக்கை அளித்த பின்பும், நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பின்பும், பாஜகவின் பெரிய தலைவர்களுடைய படத்துடன் குல்தீப்பின் படம் இணைத்து இடம்பெற்றுள்ளதற்கு அத்தலைவர்கள் கருத்து கூறுவார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.